தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு சென்ற பெண்கள் கேரளாவில் தடுத்து நிறுத்தப்பட்டனர். சபரிமலைக்கு அனைத்து பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர் தீர்ப்புக்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் உச்ச தீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த இயலாத நிலையில் கேரள அரசு உள்ளது.
இந்த நிலையில் சபரிமலைக்கு செல்ல விரும்பும் பெண் பக்தர்களை ஒருங்கிணைத்து மனிதி என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு சார்பில் நேற்று 30 பெண்கள் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் கேரளா புறப்பட்டு சென்றனர். அவர்களில் தமிழகத்தை சேர்ந்த 11 பெண்கள், ஒடிசா, மத்திய பிரதேசம், மேற்குவங்கம், சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பெண்கள் இதில் இடம்பெற்றுள்ளனர்.
இதனிடையே கேரள மாநிலம் கோட்டையத்தில் பெண்கள் குழுவுக்கு எதிராக ஆண்களும் பெண்களும் திரண்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு போலிசார் குவிக்கப்பட்டனர். 30 பெண்களும் கேரள காவல்துறைக்கு முறையாக தகவல் தெரிவித்துவிட்டு செல்வதாக கூறப்படுகிறது. 30 பெண்களில் 6 பேரை மட்டும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.அப்போது கோவிலுக்குள் பெண்களை நுழையவிடக்கூடாது என்று சிலர் போராட்டம் நடத்தினர்.அதையும் மீறி காவல்துறையினர் பக்தர்களை அழைத்து சென்ற போது , போராட்டகாரர்கள் ஐயப்ப பக்தர்கள் மீது கல் எறிந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.காவலர்கள் அவர்களை கைது செய்தனர்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…