தமது 15 வயது மகள் ஆசிரியர்களின் பாலியல் தொல்லையால் தற்கொலை! தந்தை குற்றச்சாட்டு…..
தந்தை ஒருவர் டெல்லியில் ஆசிரியர்களின் பாலியல் தொல்லையால் தமது 15 வயது மகள் தற்கொலை செய்துகொண்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மயூர் விஹாரில் உள்ள ஆல்கான் (Ahlcon)பப்ளிக் பள்ளியில் பயிலும் மாணவி சமூக அறிவியல் பாடம் எடுக்கும் இரண்டு ஆசிரியர்கள் தம்மிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாகக் கூறியுள்ளார். தாம் எவ்வளவு சிறப்பாகத் தேர்வெழுதினாலும் ஃபெயில் ஆக்கிவிடுவார்கள் என தம்மிடம் அழுதபடியே கூறியதாக அவரது தந்தை குறிப்பிட்டுள்ளார்.
சமூக அறிவியல் பாடத்தில் தோல்வியடைந்த அந்த மாணவி வீட்டில் தனியாக இருந்த போது தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, தமது மகளின் தற்கொலைக்கு அப்பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியர்கள் இருவரே காரணம் எனக் குற்றம்சாட்டி அவரது தந்தை போலீசில் புகாரளித்துள்ளார். ஆசிரியர்கள் இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.