தமது அரசு அம்பேத்கர் காட்டிய பாதையில் நடைபெறுகிறது…!

Default Image

பிரதமர் நரேந்திர மோடி  அம்பேத்கர் காட்டிய பாதையில் தமது அரசு நடந்து வருவதாகப் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற விழாவில் பேசிய பிரதமர் மோடி, தமது அரசு எப்போதும் ஏழைகளுக்காகப் பாடுபட்டு வருவதாகவும், அம்பேத்கர் காட்டிய பாதையில் நடப்பதாகவும் தெரிவித்தார். தலித் மக்களுக்குக் காங்கிரஸ் கட்சி செய்ததைவிட பாஜக அரசு நிறையவே நன்மைகள் செய்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை வலிமையற்றதாக்கும் வகையில் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை  உச்சநீதிமன்றம் 10நாட்களுக்குப் பின்னர் விசாரிப்பதாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது. இதையடுத்துப் பிரதமர் பங்கேற்ற முதல் விழாவிலேயே இவ்வாறு பேசியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்