பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் ஏய்ப்பு செய்த தொழிலதிபர் நீரவ் மோடியை தப்பி ஓடியவராக அறிவித்து, அவரது 7 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை உடனடியாக பறிமுதல் செய்ய அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது.
பொருளாதார குற்றவியல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் அடிப்படையில், கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நபர் நடவடிக்கைகளிலிருந்து தப்புவதற்காக வெளிநாட்டுக்குச் சென்றால் தப்பி ஓடியவராக கருதப்படுவார்.
கடந்த 24ம் தேதி அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் ஏய்ப்பு செய்த தொழிலதிபர் நீரவ் மோடி, சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பணத்தை வெளிநாடுகளில் போலி நிறுவனங்களின் மூலம் பதுக்கியிருந்ததாக குற்றம் சாட்டியிருந்தது.
இந்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் நீரவ்மோடியை தப்பி ஓடியவராக அறிவிக்குமாறு உச்சநீதிமன்றத்தை நாட அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
சென்னை : வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவான புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.…
சென்னை : தமிழக துணை முதல்வரும் திமுக இளைஞரணித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினின் 47ஆவது பிறந்தநாள் இன்று. உதயநிதி பிறந்தநாளை…
சென்னை: கடந்த வாரம் முழுக்க ஏறுமுகமாக இருந்த தங்கத்தின் விலை, இந்த வாரம் தொடர்ந்து இரண்டு நாளாக இறக்கம் கண்டது.…
சென்னை : வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து இன்று பிற்பகல் புயலாக மாறும் என வானிலை…
சென்னை : நீலகிரியில் இன்று முதல் நவம்பர் 30-ம் தேதி வரை தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கிறார் குடியரசு…
வாஷிங்டன் : கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல் - ஹமாஸ் போர் காசாவில் தொடர்ந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பை…