தப்பி ஓடியவராக நீரவ் மோடியைஅறிவித்து..!!மோசடி செய்த 7 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை..!!
பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் ஏய்ப்பு செய்த தொழிலதிபர் நீரவ் மோடியை தப்பி ஓடியவராக அறிவித்து, அவரது 7 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை உடனடியாக பறிமுதல் செய்ய அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது.
பொருளாதார குற்றவியல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் அடிப்படையில், கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நபர் நடவடிக்கைகளிலிருந்து தப்புவதற்காக வெளிநாட்டுக்குச் சென்றால் தப்பி ஓடியவராக கருதப்படுவார்.
கடந்த 24ம் தேதி அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் ஏய்ப்பு செய்த தொழிலதிபர் நீரவ் மோடி, சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பணத்தை வெளிநாடுகளில் போலி நிறுவனங்களின் மூலம் பதுக்கியிருந்ததாக குற்றம் சாட்டியிருந்தது.
இந்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் நீரவ்மோடியை தப்பி ஓடியவராக அறிவிக்குமாறு உச்சநீதிமன்றத்தை நாட அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்