தந்தைக்கு மருத்துவமனை கொடுத்த அதிர்ச்சி ! தலை காயத்துக்கு ரூ.16 கோடி பில்..!
சவுரவ்ப் ராஜவத், காலாட்படைப் பிரிவில் ராணுவ வீரராக உள்ளார். இவர் ஆயுர்வேத மருத்துவமனை ஒன்றின் உரிமையாளரின் மகன் ஆவார்.
பிந்த் மாவட்ட நிர்வாகத்தின் தகவல் படி ரான் பகுதியில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் ஐ.ஏ. ராஜவத் தனது மகன் சவுரவ்பிற்கு 2014 ஆம் ஆண்டு முதல் 2017 வரை சிகிச்சையளித்தார். அதற்கு ரூ.16 கோடி மருத்துவ செலவாக கோரி உள்ளார்.
ராஜவத்திற்கு சொந்தமான மருத்துவமனையானது ஆயுர்வேத மருத்துவமனையாக இருந்தாலும், சவுரப் ராஜவத்திற்கு ஆங்கில மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டு உள்ளது.
மருத்துவமனையின் செயல்பாட்டைக் கவனிக்குமாறு மாவட்ட நிர்வாகம் ரானூவ் அதிகாரிகள் கேட்டுள்ளனர்.
2013 ஆம் ஆண்டில் கடமையாற்றிய சவுரவ்ப் ராஜவத் தலையில் காயம் ஏற்பட்டதுடன், ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். “அவர் 2014 ஆம் ஆண்டில் வீட்டுக்கு வந்தார், அதன் பிறகு அவர் முழுமையாக குணமடையவில்லை என அப்பாவிடம் சிகிச்சை பெற்றார். இந்த சிகிச்சை 2017 ஆம் ஆண்டு வரை நீடித்தது. இராணுத்திற்கு இது தொடர்பாக 16 கோடி ரூபாய்க்கு மருத்துவ பில் வந்தபோது இந்த விவகாரம் வெளி வந்துள்ளது.