தண்ணீர் தட்டுப்பாடு நாட்டில் அதிகரிக்கும் ஆபத்து..!நிபுணர்கள் எச்சரிக்கை
நிபுணர்கள்,நாட்டில் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினை பூதாகாரமாக மாறுவதற்குள் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கின்றனர்.
வேகமாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதற்கு பருவநிலைமாற்றம், மாசு அதிகரிப்பு, தவறான பாசன முறை போன்றவையும் காரணமாக கூறப்படுகிறது.
சுற்றுலாதலமான ஷிம்லாவிலும், தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம் இருக்கும் பெங்களூருவிலும் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினை எழுந்துள்ளது.
உறுதியான நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்தியாவில் 2030க்குள் மிகப்பெரிய தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்று அண்மையில் நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
நதிநீர் பங்கீடு பிரச்சினை மாநிலங்களுக்கு இடையே ஏற்கனவே இருந்து வரும் நிலையில், தண்ணீர் பற்றாக்குறையால் பொருளாதார இழப்பையும் சந்திக்க வேண்டியிருக்கும். எனவே சிங்கப்பூர், இஸ்ரேல் நாடுகளைப் போல் நீர்மேலாண்மையை செயல்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.