பிசிசிஐயின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அமைப்புகளையும் கொண்டுவர உச்சநீதிமன்றத்தில் இந்திய சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டம் ஒரு குறிப்பு :
கடந்த 65 ஆண்டுகளில் நாட்டில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி மலர்ந்த பின் மத்தியில் ஆட்சி நடத்திய கட்சிகள் மக்களுக்கு பலன் கொடுக்கும் வகையில் பல சட்டங்கள் கொண்டு வந்துள்ளது. அதில் பெரும்பான்மையான சட்டங்கள் நீதிமன்றங்களால் ஏற்று கொள்ளப்பட்டுள்ளது, சில சட்டங்கள் மாற்றம் செய்யும் படி ஆலோசனை வழங்கப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளது. பொதுவாக காலத்திற்கு ஏற்ற மாற்றம் என்ற வகையில் நாடு சுதந்திரமடைந்த சமயத்தில் நாட்டின் மொத்த மக்கள் தொகை 30 கோடியாக இருந்தது.
அதற்கு ஏற்ற வகையில் சட்டமும், வளர்ச்சி திட்டமும் தீட்டி செயல்படுத்தப்பட்டது. ஆண்டுக்கு ஆண்டு மக்கள் தொகை உயர்ந்து வருவதால், அதற்கு ஏற்ற வகையில் மூல சட்டத்தில் திருத்தங்களும், புதிய சட்டங்கள் இயற்ற வேண்டிய சூழ்நிலை ஆட்சியாளர்களுக்கு ஏற்படுகிறது. அதன்படி கடந்த 60 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான புதிய சட்டங்கள் கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறது.
அதனடிப்படையில் மத்தியில் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருந்தபோது ஆட்சி நிர்வாகம் வெளிப்படையாக இருக்க வேண்டும். அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் மக்களுக்கு தெரிய வேண்டும், அரசாங்கம் மூலம் தேவையான தகவல்கள் பெற்றுகொள்ள வழிவகை செய்யும் வகையில் (Right to Information Act-2005) தகவல் அறியும் உரிமை சட்டம்-2005 என்ற சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து ஒப்புதல் பெற்றது.
இச்சட்டத்தில் உள்நாட்டு பாதுகாப்பு, பொது அமைதிக்கும் ஊறு ஏற்படுத்துதல் ஆகியவை தவிர்த்து மற்ற தகவல்கள் விண்ணப்பித்து பெற வசதி ஏற்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின் மூலம் வெளிப்படையான நிர்வாகம் அமைவதுடன், மக்களுக்கு தேவையான தகவல்கள் உரிய நேரத்தில் கிடைக்கும். இது மக்களுக்கு அரசாங்கம் கொடுத்துள்ள கொடை என்பதில் சந்தேகமில்லை.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அரசின் அனைத்து துறைகள், அரசின் நேரடி பார்வையில் இயங்கி வரும் வாரிய, கழகங்கள் மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்பாக தகவல்கள் பெற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தில் அரசாங்கம் எது ரகசியமாக பாதுகாக்க வேண்டும் என்ற தீர்மானித்துள்ளதோ, அந்த தகவல்கள் தவிர பிற அனைத்து தகவல்களும் முறைப்படி விண்ணப்பித்து பெற முடியும். (கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு தேவையான தகவல்கள் பெற வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது என்பது குறிப்பிடதக்கது)
அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் தகவல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று கடந்த 2002ம் ஆண்டு தகவல் சுதந்திரம் என்ற பெயரில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அது மக்கள் எதிர்பார்த்த வகையில் எந்த பலனும் கொடுக்கவில்லை. அரசு நிர்வாகம் வெளிப்படையாக இருக்கும் வகையில் சட்ட வேண்டும் என்ற கோரிக்கை எதிரொலித்து வந்தது.
அதை தொடர்ந்து மத்திய அரசு இது தொடர்பாக விவரம் அடங்கிய ஆய்வு அறிக்கை கொடுக்கும் படி மத்திய ஆலோசனை கழகத்திற்கு பரிந்துரை செய்தது. அதையேற்று தகவல் அறியும் உரிமை சட்டம் என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யும்படி சிபாரிசு செய்தது. அதையேற்று கடந்த 2005 அக்டோபர் 12ம் தேதி (Right to Information Act-2005) தகவல் அறியும் உரிமை சட்டம்-2005 என்ற சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது.
இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிசிசிஐ-யை கொண்டுவர இந்திய சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. பிசிசிஐயின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அமைப்புகளையும் கொண்டுவர உச்சநீதிமன்றத்தில் இந்திய சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…