இஸ்ரோ தலைவர் சிவன் இஸ்ரோ கட்டுப்பாடு மையத்துடனான தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்ட ஜிசாட் – 6ஏ செயற்கைகோளை மீண்டும் செயல்பட வைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
எஸ் பேண்ட் வசதியுடன் கூடிய அதி நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவதற்காக ஜிசாட் 6ஏ செயற்கைகோளை கடந்த வியாழக்கிழமை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்திலிருந்து ஜிஎஸ்எல்வி எஃப்8 ராக்கெட் மூலம் விண்ணில் இஸ்ரோ செலுத்தியது.
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கிரையோஜெனிக் எஞ்சின் பொருத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி எஃப் 8 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த நிலையில், ஜிசாட் 6ஏ செயற்கைகோள் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
எனினும், இரண்டாம் சுற்றுவட்டப்பாதையில் செயற்கைகோளுக்கும் இஸ்ரோவுக்கும் இடையே தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்டதாக பின்னர் அறிவிக்கப்பட்டது.
செயற்கைகோளுடன் மீண்டும் தகவல் தொடர்பை ஏற்படுத்த விஞ்ஞானிகள் முயற்சிகள் மேற்கொண்டுவருவதாக கூறியுள்ள சிவன், செயற்கைக்கோளை இயங்க வைப்பதற்கான வாய்ப்புகள் தற்போதும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…