டெல்லி – மீரட் ஸ்மார்ட் நெடுஞ்சாலையை திறந்து வைத்தார்-பிரதமர் மோடி..!!
நாட்டில் இதுவரை இல்லாத அளவு மிக அதிகமான வசதிகளுடன் கூடிய பசுமை வழிச்சாலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். டெல்லி – மீரட் இடையேயான இந்த சாலையில் பயணிக்கும் தூரத்திற்கு சுங்கக் கட்டணம், விதிமீறலுக்கு தானாகவே அபராதம் விதிக்கும் வசதிகள் உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் உள்ளன.
தலைநகர் டெல்லியில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் வரை 11,000 கோடி ரூபாய் செலவில் ஸ்மார்ட் எனப்படும் பசுமை வழிச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக மீரட் செல்லும் பாதையில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி இருக்கும் என்பதால் அதில் பயணம் செய்தால் பல மணிநேர ஆகும். எனவே நவீன வசதிகளுடன் டெல்லி – மீரட் இடையே அதிநவீன சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
மொத்தம் 135 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த சாலையில், ஒவ்வொரு 500 மீட்டருக்கும் மழைநீர் சேமிப்பு வசதி உள்ளது. வழிநெடுகிலும் உள்ள விளக்குகள் சூரிய ஒளி மின்சக்தி மூலம் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
வாகனங்களின் வேகத்தை கேமராக்கள் மூலம் கணக்கிட்டு, அதிவேக வாகனங்களுக்கு தானாக அபராத ரசீது வசூலிக்க முடியும். மேலும், இந்த சாலையில் பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் வசதியும் உள்ளது.
இந்த சாலை பணிகளின் ஒருபகுதி நிறைவு பெற்றதையடுத்து, இன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்த புதிய நெடுஞ்சாலை வழியாக டெல்லியில் இருந்து 85 கி,மீ தூரத்தில் உள்ள மீரட் நகரை 45 நிமிட பயண நேரத்தில் சென்றடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்