டெல்லி மாநில அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடவில்லை : ஐஏஎஸ் அதிகாரிகள்..!
டெல்லி மாநில அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடவில்லை என ஐஏஎஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த பெண் அதிகாரி மனிஷா சக்சேனா, ஐஏஎஸ் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக வெளியான தகவல்கள் உண்மைக்கு மாறானவை எனத் தெரிவித்தனர். அனைத்து அதிகாரிகளும் துறை சார்ந்த கூட்டங்களில் பங்கேற்று பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், சிலநேரங்களில் விடுமுறை நாட்களில் கூட வேலை பார்த்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் அனைவரும் அச்சத்துடன் காணப்படுவதாகவும், கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஐஏஎஸ் அதிகாரிகள் முற்றிலும் அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தப்படுவதாகவும், அவர்கள் சுதந்திரமாக பணி செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் மனிஷா சக்சேனா கூறியுள்ளார்.