டெல்லி பெண்களை பாதுகாக்க அரவிந்த் கெஜ்ரிவால் புதிய ப்ளான்?

Published by
Venu

கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி மாநில அரசு ஆள் கடத்தல் வழக்குகளில் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு, உடனடியாக நீதி கிடைக்கும் வகையில், இரவு நேர நீதிமன்றங்களை அமைக்க  திட்டமிட்டு உள்ளது.தலைநகர் டெல்லியில், பெண்கள், குழந்தைகள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிக அளவில் நடக்கிறது. இத்தகைய சம்பவங்களை தடுப்பது, பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளை காப்பாற்றுவது, சொந்த ஊர்களுக்கு திருப்பி அனுப்புவது, மேலும், அவர்களுக்கு கல்வி மற்றும் சுகாதார வசதிகளை தந்து, பொருளாதார ரீதியாக மேம்படுத்துவது போன்ற திட்டங்களை செயல்படுத்த, ஆம் ஆத்மி அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, கொள்கை வரைவை தயார் செய்துள்ளனர்.

அதில்  பிற மாநிலங்கள் மற்றும் அண்டை நாடுகளில் இருந்து பெண்கள்,குழந்தைகள், அதிகம் கடத்தி வரப்படும் நகரமாக டெல்லி மாறி வருவதாக கூறப்படுகிறது. இதை தடுப்பதற்காக, ஒவ்வொரு மாவட்ட அளவிலும், கடத்தல் தடுப்பு பிரிவுடன், புதிகாக ஒரு குழு அமைக்கப்படும்.சிவப்பு விளக்குப் பகுதிகளில் நடக்கும் கடத்தல்களை தடுக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், சமூக ஆர்வலர்கள், அரசாங்க ஊழியர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். பெண்களை தங்கள் கஸ்டடியில் வைத்திருப்பவர்களிடம் இருந்து அவர்களை மீட்டு கொண்டுவரத் தேவையான சட்ட உதவிகள் வழங்கப்படும். மேலும், வழக்கு தொடர்பாக, நீதிமன்றங்களில் நேரில் ஆஜராகமால், ‘வீடியோ கான்பரன்ஸ்’ தொழில்நுட்ப உதவியுடன், சாட்சிஅளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள், இரவு நேரங்களில் போலீஸ் ஸ்டேஷனில் தங்க வைக்கப்படுவதை தடுக்கவும், அவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்கவும், இரவு நேர நீதிமன்றங்கள் உருவாக்கப்படும். பாதிக்கப்படும் ணெகள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கு தனியாக நிதி ஆதாரம் உருவாக்கப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் நிதி, அவர்களின் மறுவாழ்வுக்கு பயன்படுத்தப்படும். இந்த புதிய கொள்கை வரைவு குறித்து, சம்பந்தப்பட்ட அரசு துறையினர், அதிகாரிகள், வழக்கறிஞர்கள் தங்கள் கருத்துக்களை சொல்ல, 30 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். அதன் பின், இந்த கொள்கை வரைவு, சட்டசபையில் சமர்ப்பிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

6 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

18 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

23 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

23 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

24 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

24 hours ago