டெல்லி ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர் வேலை இல்லாத காரணத்தினால் 7-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை!
வேலை இல்லாத காரணத்தினால் டெல்லி ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர் ஒருவர் ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
கிரேட்டர் கைலாஷ் பகுதியைச் சேர்ந்த அன்ஷுமன் ((Anshuman)) டெல்லி ஐ.ஐ.டி.யில் பி.டெக் படித்தவர். 31 வயதாகியும் வேலையில்லாததால் இவர் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் டெல்லி ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள கட்டிடம் ஒன்றின் 7-வது மாடியில் இருந்து குதித்த இவர் பலத்த காயம் அடைந்து உயிரிழந்தார். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.