மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்,பாஜக அரசுக்கு எதிரான டெல்லி ஆர்ச் பிஷப்பின் கடிதம் உள்நாட்டு போருக்கு வழிவகுக்கக் கூடியது என எச்சரித்துள்ளார்.
மத்தியில் உள்ள பாஜக அரசு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவ வேண்டும் என்பதற்காக கிறிஸ்தவர்கள், பிரச்சாரமும், பிரார்த்தனையும் மேற்கொள்ள வேண்டும் என டெல்லி ஆர்ச் பிஷப் அனில் கோட்டோ, தேவாலய நிர்வாகிகளுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இவ்விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தேசத்தை வலுவிழக்கச் செய்யும் என்றும், உள்நாட்டுப் போருக்கு வழிவகுக்கும் என்றும் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் எச்சரித்துள்ளார். இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அவர்களை அரசு பாகுபடுத்திப் பார்ப்பதில்லை என தெரிவித்துள்ளார்.
ஆர்ச் பிஷப்பின் கடிதத்திற்கு மத்திய அமைச்சர் கே.ஜெ. அல்போன்சும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது ஒரு தவறான நடவடிக்கை என தெரிவித்துள்ள அவர், மதத் தலைவர்கள் அரசியலில் இருந்து விலகி இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், இந்த சர்ச்சை குறித்து விளக்கம் அளித்துள்ள ஆர்ச் பிஷப் அனில் கோட்டோ, நரேந்திர மோடி அரசைக் குறிப்பிட்டு தான் அவ்வாறு கடிதம் எழதவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று (16.11.2024) முதல்…
உத்தரப்பிரதேசம் : ஜான்சி மாவட்டத்தில் மகாராணி லட்சுமிபாய் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்றிரவு நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில், பச்சிளம்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…