டெல்லியை பயமுறுத்தும் நெல் அறுவடை
டெல்லியில் காற்று மாசுபடுதல் அதிகமாகி மக்கள், குழந்தைகள் மூச்சு விடுவதற்கே பயப்படும் நிலை உருவாகிவிட்டது. இதனை காரணமாக வெளியில் செல்லும் யாரும் முகத்தில் மாஸ்க் அணியாமல் செல்ல கூடாது. என டெல்லி அரசு அறிவித்துள்ளது.
காற்று தூய்மை அளவானது 100 க்கு மேல் இருந்தாலே அது மக்களை வெகுவாக பாதிக்கும். அப்படி இருக்கும் போது டெல்லியில் டெல்லியில் 500 ஆக உள்ளது. இது சாதாரண மக்களையே மூச்சிவிட சிரமபடுத்தியுள்ளது. இதில் ஆஸ்துமா நோயாளிகள் வேறு மிகவும் சிரமபடுகின்றனர்.
இந்த காற்றுமாசுபாடு, அருகில் உள்ள மாநிலங்களில் நெல் அறுவடை முடிந்ததும் மீதம் இருக்கும் வைக்கோலை எரித்துவிடுகின்றனர். இதனால் அந்த புகை டெல்லியை சூழ்ந்து கொள்கிறது. விவசாயிகளுக்காக வைக்கோலை வைத்து இயங்கும் பயோமாஸ் மின்உற்பத்தி நிலையம் சற்று தொலைவில் உள்ளது. அங்கு கொண்டு போய் கொடுத்தால் குவிண்டாலுக்கு Rs.100 தருவார்கள். ஆனால் அதை அங்கு லொண்டு போய் சேர்பதற்கே ஆட்களுக்கு கூலி, வண்டிவாடகை என அதனை விட அதிகமாகும் என்பதால் விவசாயிகள் இப்படி எறித்துவிடுகின்றனர்.
இவ்வாறு செய்பவர்களுக்கு ரூபாய் 2500 முதல் 15ஆயிரம் வரை அபராதம் விதித்தும் இந்த எரிக்கும் சம்பவம் குறைந்த பாடில்லை.