டெல்லியில் யாருக்கு அதிகாரம்?முதல்வருக்கா?துணைநிலை ஆளுநருக்கா?உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா விசாரணை
டெல்லியில் யாருக்கு அதிகாரம் உள்ளது என விளக்கமளிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் மாநில அரசு, துணைநிலை ஆளுநர் இடையே யாருக்கு அதிகாரம் என்பது குறித்து ஆம் ஆத்மி தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழக்கை விசாரித்தனர்.டெல்லியின் அதிகாரத்தை நிர்ணயிக்கும் அரசியல் சாசன பிரிவின் அம்சங்கள் பற்றி விளக்கம் அளித்தது உச்ச நீதிமன்றம்.
ஆரசியல் சாசனத்தை மதிக்கும் படியே நிர்வாகங்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். கூட்டாட்சி தத்துவ அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இந்த வழக்கின் தீர்ப்பு டெல்லி மட்டுமின்றி புதுச்சேரிக்கும் பொருத்த வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார்.