டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையம் அடுத்துள்ள குடிசை பகுதிகளில் தீடிரென தீவிபத்து .!
50க்கும் மேற்பட்ட குடிசைகள் டெல்லியின் காலிந்தி குஞ்ச் (Kaalindhi kunj) மெட்ரோ ரயில் நிலையம் அடுத்துள்ள குடிசை வீடுகளில் திடீரென தீப்பிடித்ததில் தீக்கு இரையாகி கருகின. இங்கு 228 ரோஹிங்கயர் அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தீ விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பெரும் நெருப்பாக பரவிய தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடினர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.