டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு:4 பேருக்கும் மரண தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்!
டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தூக்குதண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
முன்னதாக கடந்த 2012-ல் டிசம்பர் 16ம் தேதி நாட்டையே உலுக்கிய ஒரு சம்பவம் டெல்லியில் அரங்கேறியது.6 பேர் கொண்ட கும்பலால் ஓடும் பேருந்தில் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.பின்னர் 3 வருடங்கள் சிறைத்தண்டனை பெற்று விடுதலையானார்கள்.ஒரு நபர் சிறையில் தற்கொலை செய்தார்.
முகேஷ், பவன் குப்தா, வினய் ஷர்மா, அக்ஷய் குமார் ஆகிய நால்வருக்கும் உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்தது.பின்னர் இவர்களில் அக்ஷய் தாகுர் தவிர நால்வர் மேல்முறையீடு செய்தனர்.
இந்நிலையில் இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் .டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தூக்குதண்டனையை உறுதி செய்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.