டெல்லியில் மகளின் கல்விக் கட்டணத்துக்காக, சாராய கடத்தலில் ஈடுபட்ட எம்பிஏ பட்டதாரி கைதாகியுள்ளார்.
அரியானாவிலிருந்து டெல்லிக்கு சாராயம் கடத்தப்படுவதைத் தடுக்க போலீசார், வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். டெல்லியில் டாப்ரி (Dabri) என்ற இடத்தில் கார் ஒன்றை சோதித்த அவர்கள், 23 அட்டைப் பெட்டிகளில் சாராயம் கடத்தப்பட்டதைக் கண்டுபிடித்தனர். கடத்தலில் ஈடுபட்ட குர்கானைச் சேர்ந்த மோகித் கோஸ்வாமி (Mohit Goswami), என்பவரை கைது செய்து விசாரித்தனர். அதில், எம்.பி.ஏ. மற்றும் பி.டெக் பட்டதாரியான அவர், சிங்கப்பூரில் நிறுவனத்தில் வேலையிழந்து 3 மாதங்களாக வருமானமின்றி தவித்தது தெரியவந்தது. மகளின் கல்விக்கட்டணம் 80 ஆயிரம் ரூபாய் செலுத்த வழியின்றி, நண்பர் மூலம் கிடைத்த தொடர்பில், ஒரு அட்டைப்பெட்டிக்கு 500 ரூபாய் என்ற வீதத்தில் சட்டவிரோத சாராயத்தை கடத்தியதாக கோஸ்வாமி கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…