டெல்லியில் காலை நேரத்தில் திடீரென பெய்த மழையால், வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சி….!
காலை நேரத்தில் டெல்லியில் திடீரென பெய்த மழையால், வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தலைநகர் டெல்லி உள்பட நாடு முழுவதும் கடும் வெயில் கொளுத்திவருகிறது. இதனால், வெப்பத்தை தணிக்க மலைப்பகுதி சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்கள் படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில், இன்று அதிகாலையில் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. கடும் வெயில் கொளுத்திய நிலையில் பெய்த மழையால், வெப்பம் தணிந்து, பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.