டெல்லியில் இரண்டாவது நாளாக 400 இறப்புகள்..! தொற்றுப்பரவல் 30% ஆக குறைந்துள்ளது..!
கொரோனாவின் இரண்டாவது அலை மிக மோசமாக இந்தியாவில் பரவி வரும் நிலையில் டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை அன்று 20,394 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது. இதனால், தேசிய தலைநகரமான டெல்லியில் கோவிட்-19 பாதித்தவர்களின் எண்ணிக்கை 11,94,946 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 16,966 ஐ எட்டியுள்ளது.
டெல்லி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 407 இறப்புகள் பதிவாகியுள்ளன. மேலும்,டெல்லி அரசின் சுகாதாரத்துறை அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 71,997 கோவிட்-19 சோதனைகள் நடத்தப்பட்டன.
இதன்படி, டெல்லியில் 11,94,946 பேருக்கு இதுவரை தொற்று பரவியுள்ளது. இதில் 10,85,690 பேர் குணமடைந்தவர்கள் மற்றும் வெளியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 92,290 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவற்றில் 50,742 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.