டெல்லியில் இன்று ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை சீராய்வுக் கூட்டம்…!!
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை சீராய்வுக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது.
குறுகிய கால கடன்களுக்கான வட்டியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் ரிசர்வ் வங்கி மறுத்து வருகிறது. இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை சீராய்வுக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தொழில் மேம்பாடு, குறைந்த வட்டியில் கடன் வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.
முதலீடுகள் பெருக குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் எனக்கூறி வட்டிவிகிதத்தைக் குறைக்க ரிசர்வ் வங்கி மறுத்துவிட்டது. இந்நிலையில் பணவீக்கத்தை மேலும் கட்டுப்படுத்த இந்தக் கூட்டத்திலும் ரிசர்வ் வங்கி விரும்புவதால் வட்டி விகிதத்தில் மாற்றங்கள் இருக்காது என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தற்போது குறுகிய கால வட்டி 6.5 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
dinasuvadu.com