டெல்லியில் அடுக்குமாடிக் கட்டிடத்தில் விபத்து..!
டெல்லி அடுத்த குர்கிராமில் அடுக்குமாடிக் கட்டடத்தின் 11 வது மாடியில் இருந்து லிப்ட் சரிந்து விழுந்ததில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
500 குடியிருப்புகளைக் கொண்ட ரீஜன்சி பார்க் எனும் வளாகத்தில் அமைக்கப்பட்ட லிப்டில் மூன்று பேர் 11ம் மாடிக்கு போன போது இந்த விபத்து நேரிட்டது. இதில் லிப்டை இயக்கியவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
ஒரு பெண் மற்றும் அவர் கார் ஓட்டுனர் ஆகியோர் பலமான காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
லிஃப்டை முறையாக பராமரிக்காததே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.