டில்லிக்குள் 2 தீவிரவாதிகள் ஊடுருவல்… புகைப்படங்களை வெளியிட் டில்லி போலீஸ்….!!
டில்லி நகருக்குள் ஊடுருவியுள்ள இரண்டு தீவிரவாதிகளின் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
ஜெய்ஷ்-இ முகம்மது இயக்கத்தை சேர்ந்த 7 பயங்கரவாதிகள் பஞ்சாப்பில் இருந்து டில்லி நோக்கி சென்றதாக போலீசார் கடந்த வாரம் எச்சரித்திருந்தனர்.
இந்நிலையில் டில்லிக்குள் ஊடுருவியுள்ள 2 தீவிரவாதிகளின் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படத்திலுள்ள தீவிரவாதிகள் பஞ்சாப் எல்லைப் பகுதியில் உள்ள மைல்கல் ஒன்றின் மீது சாய்ந்தபடி நிற்கிறார்கள். இவர்கள் குறித்த தகவல் கிடைத்தால் உடனே தொலைபேசி முலம் தெரிவிக்குமாறு தெரிவித்துள்ள போலீசார், அவர்களை தேடும் பணியை முடுக்கி விட்டுள்ளனர்.
dinasuvadu.com