Categories: இந்தியா

டிரைவிங் லைசென்சுடன் ஆதார் இணைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறது மத்திய அரசு..!

Published by
Dinasuvadu desk
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஆதார் அட்டைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.
கியாஸ் மானியம் உள்பட மத்திய அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.
மேலும் வங்கி கணக்கு, ‘பான்கார்டு’ செல்போன் எண் உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் ஆதார் எண்ணுடன் ஓட்டுநர் உரிமத்தை இணைக்க மத்திய அரசு திட்டமிட்டது. சட்டத்துக்குப் புறம்பாக தற்போது பலரும், ஒன்றுக்கும் மேற்பட்ட ஓட்டுநர் உரிமங்களை வைத்து உள்ளனர். விதிகளை மீறும் போது ஒரு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டால் மற்றொன்றைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
போலி பெயர்களிலும் ஓட்டுநர் உரிமங்கள் வாங்கிக் கொள்கிறார்கள், இவ்வாறு ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஓட்டுநர் உரிமங்களை வைத்திருப்பதை தடை செய்யும் வகையில், ஆதார் எண்ணுடன் ஓட்டுநர் உரிமத்தை இணைக்க மத்திய அரசு திட்டமிட்டது.
இந்நிலையில் டிரைவிங் லைசென்சுடன் ஆதார் இணைப்பு தொடர்பாக கட்காரியுடன் பேசிவருகிறேன் என ரவிசங்கர் பிரசாத் கூறிஉள்ளார்.
ரவிசங்கர் பிரசாத் பேசுகையில், “டிரைவிங் லைசென்சுடன் ஆதார் இணைப்பு தொடர்பாக கட்காரியுடன் பேசிவருகிறேன், குடித்துவிட்டு வாகனம் ஓட்டி ஒருவரை கொன்றுவிட்டு பிற மாநிலங்களுக்கு தப்பும்போது குற்றவாளி சிக்கிக்கொள்வார். ஒருவர் தன்னுடைய பெயரை மாற்றிக்கொள்ளலாம், ஆனால் கைரேகையை மாற்ற முடியாது,” என கூறிஉள்ளார்.

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

3 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

3 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

5 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

5 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

8 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

8 hours ago