டிசம்பர் 11-ல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்…!!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 11-ம் தேதி தொடங்கி ஜனவரி 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த முறை ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் நடைபெறுவதால் குளிர்கால கூட்டத்தொடர் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
5 மாநில தேர்தல் முடிந்தவுடன் டிசம்பர் 11-ம் தேதி தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர் ஜனவரி 8-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த கூட்டத்தொடரில் சபரிமலை விவகாரம், ரபேல் விமான பேர ஊழல், பண மதிப்பிழப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் விவாதிக்கப்படும் என்பதால் கூட்டத்தொடர் முழுவதும் பரபரப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
dinasuvadu.com