டயானா உலக அழகிப் பட்டத்துக்கு தகுதியானவர் அல்ல!அப்படி ஒன்னும் பெரிய அழகி கிடையாது டயானா! திரிபுரா முதலமைச்சர் பிப்லப் தேப் கருத்து

Default Image

திரிபுரா முதலமைச்சர் பிப்லப் தேப்,டயானா ஹைடனுக்கு உலக அழகிப்பட்டம் கொடுக்கப்பட்டது பெரிய நகைச்சுவை என  தெரிவித்துள்ளார். டயானா ஹைடன் 1997-ஆம் ஆண்டு உலக அழகிப்பட்டம் வென்றவர். இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திரிபுரா முதலமைச்சர் பிப்லப், டயானா ஹைடன் உலக அழகிப் பட்டத்துக்கு தகுதியானவர் அல்ல என்றும், சர்வதேச ஃபேஷன் மாஃபியாக்கள் வணிக நோக்கத்துக்காக டயானாவை உலக அழகியாக தேர்ந்தெடுத்துவிட்டதாகவும் கூறினார்.

இந்தியாவில் அழகுக்கான இலக்கணம் கடவுளர்களான லட்சுமி, சரஸ்வதி தான் என்றும் அந்த வகையில் ஐஸ்வர்யாராயிடம் அழகின் சாரம் உள்ளதாகவும், தெரிவித்த பிப்லப் தேப், டயானா ஹைடனுக்கெல்லாம் அழகிப்பட்டம் கொடுத்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்