ஜோத்பூரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு! சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி!

Default Image

சாமியார் ஆசாராம் பாபு, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில்  குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ராஜஸ்தான், குஜராத், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் ஆசிரமம் நடத்தி வந்த சாமியார் ஆசாராம் பாபு மீது அடுத்தடுத்து பாலியல் புகார்கள் கூறப்பட்டன. ஆசாராம் பாபுவும், அவரது மகனும் ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் வைத்து தங்களை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த சகோதரிகள் புகார் அளித்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரைச் சேர்ந்த ஒரு சிறுமியும் ஆசாராம் பாபு தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக புகார் அளித்திருந்தார். இந்த  புகார்கள் தொடர்பாக சாமியார் ஆசாராம்பாபு  கைது செய்யப்பட்டு ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  ஆசாராம் பாபு உள்ளிட்டோர் மீது சிறுமிகள் பாலியல் பலாத்காரம், அடைத்துவைத்தல், அச்சுறுத்தல், சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில் ஷாஜகான்பூர் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கை விசாரித்த ஜோத்பூரில் உள்ள தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது.

இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று நீதிபதி ஜோத்பூர் சிறைக்கே சென்று வழங்கினார். சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்ட 5 பேரும் குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பளித்தார். ராஜஸ்தான், குஜராத், ஹரியானா ஆகிய மாநிலங்களில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஏராளமான ஆதரவாளர்கள் இருப்பதால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்