இந்தியாவில் தற்போது பா.ஜ.க ஆட்சி நடைபெறுகிறது,இந்த ஆட்சியில் மக்களுக்கு பெரும் பாதிப்பு வந்துள்ளதாகவும் நாட்டின் பொருளாதாரம் பின்னுக்கு சென்றுள்ளதாகவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதனால் மத்திய அரசின் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. எனவே நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் அடிப்படியில் வாக்களிக்க அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பங்கெடுக்கப் போவதில்லை என தெலுங்கு தேச கட்சி எம்பி ஒருவர் தெரிவித்துள்ளார். அக்கட்சியின் எம்பியான ஜே.சி. திவாகர் ரெட்டி நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே தாம் பங்கேற்கப் போவதில்லை எனக் கூறியுள்ளார்.
ஆந்திராவில் ஆட்சி நடத்தும் தெலுங்குதேச அரசு, நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான நம்பிக்கையை உடைக்கும் வகையில் மத்திய அரசு இரண்டின் மீதுமே தாம் மிகுந்த அதிருப்தி அடைந்திருப்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். கட்சிக் கொறடா உத்தரவை மீறியதாக தம் மீது குற்றச்சாட்டு வந்தாலும் அதனைத் தாம் பொருட்படுத்தப் போவதில்லை எனவும் ஜே.சி.திவாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…