ஜேசிபி வாகனத்தில் ஊர்வலம் சென்ற புதுமண தம்பதி ..!

Default Image
கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சேட்டன். இவர் ஜேசிபி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். சேடனுக்கும், மமதா என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. தனது ஜேசிபி இயந்திரத்தின் மீது மிகுந்த அன்பு கொண்டவரான இவர் புதிய முயற்சியில் ஈடுபட்டார்.
திருமணம் முடிந்த பின் மனைவியை ஜேசிபி இயந்திரத்தின் முன்னாள் உள்ள தூக்கியில் உட்கார வைத்தார். பின்னர் வீடு வரை அந்த வாகனத்தில் இருவரும் ஊர்வலமாக சென்றனர். அதனை கண்ட அனைவரும் ஆச்சரியமடைந்தனர். இந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

தனது பணி மீது உள்ள மரியாதையினாலும், கஷ்டப்பட்டு வாங்கிய ஜேசிபி மீது கொண்ட அன்பினாலும் இந்த புதிய முயற்சியில் ஈடுபட்டதாக சேட்டன் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்