ஜூன் 14 அன்று காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம் ..!
காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம் அதன் தலைவர் சித்தராமையா தலைமையில் பெங்களூருவில் நாளை மறுநாள் நடைபெறுகிறது.
அமைச்சர் பதவி கிடைக்காத சிலர் அதிருப்தியில் உள்ளதால், இப்பிரச்சனை குறித்து ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, கர்நாடக தேர்தலில், சித்தாரமையாவைத் தோற்கடித்த மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏ G.T.தேவெகவுடா பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசினார்.
தாம் விரும்பிய வேளாண்துறையை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியிருப்பதாகவும், இதற்கு முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியும் உறுதியளித்திருப்பதாகவும் தெரிவித்தார்.