ஜிஎஸ்எல்வி மார்க் 3 டி2 ஜிசாட் -29 செயற்கைக்கோள் இரட்டிப்பு வெற்றி பிரதமர் பெருமிதம்..!!தொலைநோக்கிற்கு தோள் கொடுக்கும் ஜிசாட்-29 பற்றி அறிவீர்களா..??
ஜிஎஸ்எல்வி மார்க் – 3 டி2 ராக்கெட் மூலம் ஜிசாட் -29 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.
இந்தியாவின் பெருமையாக கருதப்படும் ஜிஎஸ்எல்வி மார்க் – 3 டி2 ராக்கெட் தான் இதுவே இந்தியா ராக்கெட்டில் அதிக எடை திறன் கொண்டது.
இந்த ஏவுகனையை ஏவியதன் மூலம் இஸ்ரோவின் தொலைநோக்கு திட்டமான கஹான்யான் திட்டம் இந்த திட்டம் மனிதனை விண்வெளிக்கு அனுப்புவது இந்த திட்டத்திற்கு இப்பொழுது அனுப்ப பட்ட ஜிஎஸ்எல்வி மார்க் – 3 டி2 ராக்கெட் மூலம் ஜிசாட் -29 செயற்கைக்கோள் போலதான் அனுப்பபட உள்ளது.
அந்த திட்டத்திற்கு கூடுதல் உற்சாகத்தை தரும் விதமாக இந்த ஜிசாட் -29 செயற்கைக்கோள் தற்போது வெற்றிகரமாக விண்ணில் சீறி பாய்ந்து தொலைநோக்கு திட்டத்திற்கு தோள் கொடுத்துள்ளது.
மேலும் ஜிசாட் பத்திரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. இஸ்ரோவை உலகே இதை உற்று நோக்கி பார்க்கிறது.இதில் திட எரிபொருள்,திரவ எரிபொருள் மற்றும் கிரஜியோனிக் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது முற்றிலும் இந்தியாவிலே தயாரிக்கப்பட்டது.மேலும் அதிக எடை கொண்ட இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் இது என்பது குறிப்பிடத்தக்து.
இஸ்ரோவின் இந்த வெற்றிக்கு நாட்டு மக்களும் வாழ்த்து தெரிவித்த வருகின்ற நிலையில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார் அதில் இந்தியாவிற்கு இரட்டிப்பு வெற்றி என்று தெரிவித்துள்ளார்.
DINASUVADU