ஜார்க்கண்ட் மாநிலம் கோட்டா மாவட்டம் துல்லு கிராமத்தில் உள்ள சில வீடுகளில் வளர்க்கப்பட்ட எருமை மாடுகளை காணவில்லை. அவற்றை பொதுமக்கள் தேடி வந்த நிலையில், அருகில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து புதன்கிழமை காலையில் மாட்டுடன் வந்த நபர்களை அப்பகுதி மக்கள் பிடித்துள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்த துல்லு கிராம மக்கள் அங்குசென்று, அந்த நபர்களை மாடு பிடித்து மாடு கடத்தும் கும்பல் என நினைத்து அடித்து உதைத்துள்ளனர். இதில், இரண்டு பேர் உயிரிழந்தனர். 3 பேர் பொதுமக்களின் பிடியில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து துல்லு கிராமத்தைச் சேர்ந்த 4 பேரைக் கைது செய்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட 4 பேரின் வழக்கு செலவுகளுக்கான பணத்தை தான் செலுத்தப் போவதாக பா.ஜ.க. எம்.பி. நிஷிகந்த் துபே தெரிவித்துள்ளார். இது தனது தனிப்பட்ட முடிவு என்றும், 4 பேரையும் அநியாயமாக போலீசார் கைது செய்திருப்பதாகவும் கூறினார்.
‘ஒட்டுமொத்த கிராமமே இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. திருட்டு போன மாடுகளின் உரிமையாளர்கள் என்பதற்காக 4 பேரை மட்டும் தனிமைப்படுத்தி கைது செய்திருப்பது ஏன்?’ என்றும் துபே கேள்வி எழுப்பி உள்ளார்.
நிஷிகந்த் துபே, கோட்டா மக்களவைத் தொகுதியில் இருந்து பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டு இறுதியில் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,…
சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…
சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…
ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர்…
நியூ யார்க : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க போகிறார். அந்த…