ஜார்கண்ட் மாநிலத்தில் சாப்பிட உணவின்றி பசிக்கொடுமையால் பெண் பலி ..!
ஜார்கண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள கிரிதிஹ் அருகே உள்ள டும்ரி பகுதியில் 58 வயதான பெண் ஒருவர் நேற்று பட்டினியால் இறந்தார். அந்த பெண்மணி சாவித்ரி தேவி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட மக்கள் கூறுகையில்,
“அதிகாரிகளின் கவனக்குறைவால், அவளுடைய ரேஷன் கார்டை உருவாக்க முடியவில்லை, அதனால்தான் அவர் ரேஷன் பொருட்கள் பெற முடியவில்லை, குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று அவா்கள் கூறினா். அவரது தாயார் இறந்த பிறகு, சரஸ்வதி தேவி ஒரு ரேஷன் கார்டு வழங்க பல முறை கோரிக்கை விடுத்தும் யாரும் கவனிக்கவில்லை என்று தெரிவித்தனா்.
“சாவித்ரி தேவியின் இரண்டு மகன்களும் எப்போதாவது வெளியே வேலைகளை செய்து தினசரி ரொட்டி கொண்டு வருவார்கள் ஆனால் தற்போது சாவித்ரி தேவிக்கு மூன்று நாட்களாக உணவு கிடைக்கவில்லை”எனவும், உணவுக்காக அவா்கள் பிறரை சார்ந்து தான் இருந்து வந்தனா். ரேஷன் கார்டு இல்லாததுதான் இந்த சம்வத்திற்கு காரணம் என்று பல்வேறு மக்கள் குற்றசாட்டியுள்ளனா்.
மேலும் இந்த சம்பவம் குறித்து டூரி எம்.எல்.ஏ. ஜகார்நாத் மஹோ கூறுகையில்,
இந்த விஷயம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் அந்த பெண்மணி இறப்பிற்கு காரணம் அதிகாரிகளின் அலட்சியம் என்று அவா் கூறினார். இந்நிலையில் மசூதி மாநில சட்ட மன்றத்தில் இந்த பிரச்சினை எழுப்பப்படும் என்றும் தெரிவித்தார்.