ஜம்மு-காஷ்மீர் மாநிலம் வளர்ச்சிக்காக ரூ.25,000 கோடியில் திட்டங்கள் தொடங்கப்படும்! பிரதமர் நரேந்திர மோடி!
பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒருநாள் பயனமாக காஷ்மீர் மாநிலம் ஜம்மு நகருக்கு சென்றார். மோடி வருகையை முன்னிட்டு, ஜம்முவில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. லேஹ் பகுதியில் நடைபெற்ற குஷோக் பாகுலா ரின்போபே நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் விவசாய வளர்ச்சிக்கு பெரும் வாய்ப்பு உள்ளது. இந்த மாநிலம் ஆரோக்கிய பராமரிப்புக்கு உதவும் வகையில் ஒரு முக்கிய பங்குவகிக்கிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் வளர்ச்சிக்காக ரூ.25,000 கோடியில் திட்டங்கள் தொடங்கப்படும். இந்த வளர்ச்சித் திட்டங்களால் மக்கள் பயனடைவார்கள் என பிரதமர் மோடி கூறினார்.