ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு மே மாதத்திற்கு முன்னதாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத், கலைக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி காஷ்மீரில் அடுத்த ஆண்டு மே மாதத்திற்கு முன்னதாக தேர்தல் நடத்தப்படும் என்றார்.மக்களவை தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் நடத்தப்படுமா என்பது குறித்து ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பாஜக கூட்டணியில் ஏற்பட்ட விரிசலை அடுத்து அங்கு ஆளுநர் ஆட்சி அமலில் இருந்தது. இந்தநிலையில், தேசிய மாநாட்டு கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை கூட்டணி கட்சிகளுடன் இணைந்து அங்கு ஆட்சியமைக்க நேற்று முன்தினம் உரிமை கோரின. ஆனால் சட்டப்பேரவையை கலைத்து ஆளுநர் சத்யபால் மாலிக் உத்தரவிட்டார். கட்சிகளுக்கிடையில் குதிரை பேரம் நடைபெற்றதாக கிடைத்த புகாரையடுத்து இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.
DINASUVADU.COM
மும்பை : இந்தியாவில் பல இடங்களில் சையத் முஷ்டாக் அலி டிராபி நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணியின் மூத்த…
சென்னை : ஐயா விடாமுயற்சி அப்டேட் கொடுங்க என அஜித் ரசிகர்கள் அந்த படத்தின் அப்டேட்டை தினமும் தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்டு வருகிறார்கள்.…
வாஷிங்டன் : அமெரிக்காவில் சூரிய மின்சக்தித் திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி மீது பல…
உத்திரபிரதேசம் : மாநிலத்தில் சம்பல் என்ற ஷாஹி ஜமா மசூதி ஒன்று இருக்கிறது. ஆனால், இந்த மசூதி இங்கு இருப்பதற்கு முன்னதாக…
சென்னை : தமிழகத்தின் முதல் பெண் முதல்வரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் வானகரத்தில்…
சென்னை : அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் திருநாள் அன்று சிஏ பவுண்டேஷன் தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய…