ஜம்மு காஷ்மீருக்குள் தீவிரவாதிகளை அனுப்புவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும்..!!-ராணுவ தளபதி கடும் எச்சரிக்கை..!!
ரம்ஜான் மாதத்தையொட்டி ஜம்மு-காஷ்மீரிலும், இந்திய எல்லையிலும் ராணுவ பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருவதாக என்று ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார். அப்பகுதிகளில் அமைதி நிலவுவது தொடர்ந்தால் ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தி கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்தால் ராணுவ நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் இந்தியா போல பாகிஸ்தானும் அமைதியை விரும்புகிறது என்றால் ஜம்மு-காஷ்மீர் வழியாக தீவிரவாதிகளை அனுப்புவதை அந்நாட்டு அரசு நிறுத்தி கொள்ள வேண்டும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவல் ஒரு பக்கமும் ராணுவத்தினரின் தாக்குதல் ஒரு பக்கமும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதிலும் பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லையோர கிராமங்கள் மீது தொடர்ந்து வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருவதாகவும், இதனால் அங்கு ஏராளமான உயிர் சேதமும், பொருட் சேதமும் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல் தொடர்ந்தால் இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுக்கும் என்றும் ராணுவ தளபதி கூறியுள்ளார்.
மேலும் இரு நாடுகளிடையேயும் அமைதி நிலவ வேண்டுமானால், எல்லை கடந்த பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டியது அவசியம் என்றும் ராணுவ தளபதி தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்