ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாமை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல்!
நேற்று இரவு ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் உள்ள ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து ராணுவத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
இதில் ராணுவ வீரர் ஒருவரும் பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்தனர்.உயிரிழந்த நபர் சுமோ வாகன ஓட்டுனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். தீவிரவாதிகளில் ஒருவனும் சுட்டுக் கொல்லப்பட்டான்.
தப்பியோடிய இதர தீவிரவாதிகளைத் தேடும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். தீவிரவாதத்தை தடுப்பதற்காக அப்பகுதியில் இணைய சேவை மற்றும் ரயில்போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.