ஜம்மு காஷ்மீரில் சிறுமி தரப்புக்காக ஆஜராகும் வழக்கறிஞர் தீபக் சிங் ராஜ்வாட்க்கு கொலை மிரட்டல் .!

Published by
Venu

இன்று , ஜம்மு காஷ்மீரில் 8 பேரால் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சிறுமி ஆசிபா தொடர்பான வழக்கின் விசாரணை தொடங்குகிறது.

இதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 8 பேரில் ஒருவன் 18 வயது நிரம்பாதவன் என்பதால் அவன் மீது தனியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.வழக்கை வாதாட ஜம்மு காஷ்மீர் அரசு இரண்டு மூத்த வழக்கறிஞர்களை நியமித்துள்ளது.

இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்றும் அரசுத் தரப்பில் கோரிக்கை விடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமிகள் மீதான பலாக்காரத்தைக் கண்டித்து, பாலிவுட்டின் நட்சத்திரங்களும் திரண்டு மும்பையில் பேரணி நடத்தினர்.

சிறுமிகளை பலாத்காரம் செய்வோருக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி டெல்லி, மும்பை ,திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன.

இந்த வழக்கில், நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவிடாமல் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சிறுமி தரப்புக்காக ஆஜராவதாக அறிவித்ததிலிருந்து கொலை மிரட்டல்கள் வருகின்றன என்று வழக்கறிஞர் தீபக் சிங் ராஜ்வாட்  தெரிவித்துள்ளார்.இதில் அவர் கூறியது , நான் எப்போது வரை உயிருடன் இருப்பேன் என எனக்கு தெரியாது, நான் கொல்லப்படலாம்; ‘நாங்கள் உன்னை மன்னிக்க மாட்டோம்’ என நேற்றும் நான் மிரட்டப்பட்டேன் என்று வழக்கறிஞர் தீபக் சிங் ராஜ்வாட் தெரிவித்தார்.நான் ஆபத்தில் இருப்பதை பற்றி உச்சநீதிமன்றத்தில் தெரியப்படுத்தப்போகிறேன் என்று கூறினார்.

இத்தகைய எதிர்ப்புகளுக்கு மத்தியில், அந்த வழக்கு விசாரணை இன்று தொடங்குகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

“சீமான் கருத்துக்கள் பதற்றத்தை ஏற்படுத்துகிறது!” உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…

9 minutes ago

கரடு முரடான ரோட்டிற்கு குட்’பை’… விரைவில் வருகிறது பறக்கும் கார்? வைரல் வீடியோ உள்ளே…

சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில்,  சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…

60 minutes ago

“18 வயதில் ரேஸிங் தொடங்கினேன்…ரேஸ் முடியும் வரை நடிக்க மாட்டேன்” அஜித் குமார் அதிரடி அறிவிப்பு!

துபாய்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு…

1 hour ago

“திருப்பதியில் விஐபிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை கைவிட வேண்டும்” – பவன் கல்யாண்!

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல்…

2 hours ago

பள்ளி குழந்தை பலியான சம்பவம் – 3 பேருக்கும் ஜாமின்!

சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பலியானது பெரும்…

2 hours ago

மீண்டும், மீண்டுமா? உ.பி-க்கு ரூ.31 ஆயிரம் கோடி! தமிழ்நாட்டுக்கு ரூ.7 ஆயிரம் கோடி மட்டுமே!

சென்னை : மத்திய அரசு வசூல் செய்யும் ஜிஎஸ்டி வரித்தொகையானது, மாதந்தோறும் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அவ்வாறு இன்று டிசம்பர் மாதம்…

3 hours ago