ஜம்மு காஷ்மீரில் சிறுமி தரப்புக்காக ஆஜராகும் வழக்கறிஞர் தீபக் சிங் ராஜ்வாட்க்கு கொலை மிரட்டல் .!
இன்று , ஜம்மு காஷ்மீரில் 8 பேரால் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சிறுமி ஆசிபா தொடர்பான வழக்கின் விசாரணை தொடங்குகிறது.
இதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 8 பேரில் ஒருவன் 18 வயது நிரம்பாதவன் என்பதால் அவன் மீது தனியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.வழக்கை வாதாட ஜம்மு காஷ்மீர் அரசு இரண்டு மூத்த வழக்கறிஞர்களை நியமித்துள்ளது.
இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்றும் அரசுத் தரப்பில் கோரிக்கை விடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமிகள் மீதான பலாக்காரத்தைக் கண்டித்து, பாலிவுட்டின் நட்சத்திரங்களும் திரண்டு மும்பையில் பேரணி நடத்தினர்.
சிறுமிகளை பலாத்காரம் செய்வோருக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி டெல்லி, மும்பை ,திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன.
இந்த வழக்கில், நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவிடாமல் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சிறுமி தரப்புக்காக ஆஜராவதாக அறிவித்ததிலிருந்து கொலை மிரட்டல்கள் வருகின்றன என்று வழக்கறிஞர் தீபக் சிங் ராஜ்வாட் தெரிவித்துள்ளார்.இதில் அவர் கூறியது , நான் எப்போது வரை உயிருடன் இருப்பேன் என எனக்கு தெரியாது, நான் கொல்லப்படலாம்; ‘நாங்கள் உன்னை மன்னிக்க மாட்டோம்’ என நேற்றும் நான் மிரட்டப்பட்டேன் என்று வழக்கறிஞர் தீபக் சிங் ராஜ்வாட் தெரிவித்தார்.நான் ஆபத்தில் இருப்பதை பற்றி உச்சநீதிமன்றத்தில் தெரியப்படுத்தப்போகிறேன் என்று கூறினார்.
இத்தகைய எதிர்ப்புகளுக்கு மத்தியில், அந்த வழக்கு விசாரணை இன்று தொடங்குகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.