சோனியாகாந்தி சிகிச்சைக்காக வெளிநாடு சென்றார்!
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி உடல் நல சிகிச்சைக்காக நேற்றிரவு வெளிநாடு சென்றார்.காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் தமது தாயுடன் சென்றுள்ளார். ராகுல் ஒருவாரத்தில் திரும்பி வருவார் என்றும், சோனியா சிகிச்சை முடித்து திரும்புவார் என்றும் காங்கிரஸ் கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கர்நாடக அமைச்சரவை இலாகா ஒதுக்கீடு, மாநிலத் தலைவர்கள் நியமனம் போன்ற முக்கிய முடிவுகள் ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு அமெரிக்காவில் சோனியா காந்திக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.