சைக்கிளில் ஹெல்மட் அணியாமல் சென்றவருக்கு 2000 அபராதம்..!!
கேரளாவில் சைக்கிள் வேகமாக சென்றதாகவும், ஹெல்மட் அணியாததாலும் இளைஞரிடம் போலீசார் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் கும்பாலாவில் இருக்கும் நெடுஞ்சாலையில் உத்திரபிரதேசத்தை சேர்ந்த இளைஞர் காசிம் சைக்கிள் ஒட்டி சென்றுள்ளார். அப்போது அவரை மறித்த காவல்துறையினர், ஹெல்மட் அணியாமல் ஏன் வந்தாய் எனவும், வேகமாக வந்துள்ளாய் எனவும் கூறி 2 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்துள்ளனர். மேலும் 500 ரூபாய்க்கு ரசீது கொடுத்தும் அந்த இளைஞரை அனுப்பியுள்ளனர். தற்போது அந்த ரசீதை சமூக வலைதளத்தில் வெளியிட்டு தனக்கு நேர்ந்த அவலத்தை அந்த இளைஞர் வீடியோவாக பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
DINASUVADU