சைஃபுதீன் சோஸ் கூறிய கருத்துக்கு பா.ஜ.க., சிவசேனா கண்டனம்..!
காங்கிரஸ் மூத்த தலைவர் சைஃபுதீன் சோஸ் ( Saifuddin Soz ), காஷ்மீர் சுதந்திரமாக இயங்குவதையே அம்மாநில மக்கள் விரும்புவதாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் கூறியது சரிதான் என்று, தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மத்திய அமைச்சராகவும், ஜம்மு காஷ்மீரின் காங்கிரஸ் தலைவராகவும் இருந்தவர் சைஃபுதீன் சோஸ். இவர் எழுதியுள்ள புத்தகம் ஒன்று விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானோடு காஷ்மீர் இணைவதை அம்மாநில மக்கள் விரும்பவில்லை என்றும், காஷ்மீர் சுதந்திரமாக இயங்குவதையே விரும்புவதாகவும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் ஏற்கனவே கூறியதை நினைவுகூர்ந்துள்ளார்.
முஷாரப்பின் அந்தக் கருத்து சரிதான் என்றும், தானும் அதை வழிமொழிவதாகவும் சைஃபுதீன் கூறியுள்ளார். ஆனால் சுதந்திரமான காஷ்மீர் என்பது சாத்தியமில்லை என்று தனக்கு தெரியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரின் இந்தக் கருத்துக்கு பாஜக, சிவசேனா கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.