பிரதமரின் கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின்கீழ் ரேசனில் இலவசமாக வழங்கப்படும் கூடுதல் உணவு தானியம் வழங்கும் திட்டம் வரும் நவ.30 ஆம் தேதிக்குப் பின்னர் நீட்டிக்கும் பரிசீலனை இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் உள்ள ஏழை மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்காக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ‘பிரதமரின் கரிப் கல்யாண் யோஜனா’ எனும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.அதன்படி,இத்திட்டத்தின் வாயிலாக ரேசன் கடைகள் மூலமாக 80 கோடி பேருக்கு அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக,இத்திட்டத்தின் மூலம் மானிய விலை உணவு தானியத்துக்கு மேல், ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது.
மூன்று மாதங்களுக்கு (ஏப்ரல்-ஜூன் 2020) என்ற கணக்கில் தொடங்கப்பட்ட இத்திட்டம் கொரோனா நெருக்கடி தொடர்ந்ததால், மேலும் ஐந்து மாதங்களுக்கு ஜூலை-நவம்பர் 2020 வரை நீட்டிக்கப்பட்டது. கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலை தொடங்கிய பிறகு,இத்திட்டம் மீண்டும் இரண்டு மாதங்களுக்கு (மே-ஜூன் 2021) நீட்டிக்கப்பட்டு,பின்னர் மேலும் ஐந்து மாதங்களுக்கு (ஜூலை-நவம்பர் 2021) நீட்டிக்கப்பட்டது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்ட இந்த திட்டம் வருகின்ற நவம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில்,பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா (பிஎம்ஜிகேஏய்) திட்டத்தின் கீழ் இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் நீட்டிப்பது குறித்து எந்த பரிசீலனையும் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும்,இது தொடர்பாக சமையல் எண்ணெய் விலை வீழ்ச்சி குறித்த செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய மத்திய உணவுத்துறைச் செயலாளர் சுதன்ஷூ பாண்டே கூறுகையில்,”தற்போது பொருளாதாரம் புத்துயிர் பெற்று மீண்டு வருவதாலும், உணவு தானியங்கள் புழக்கம் நன்றாக இருப்பதாலும் பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா (பிஎம்ஜிகேஏய்) மூலம் இலவச உணவு தானிய விநியோகத்தை நீட்டிக்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை”, என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : டெல்லியின் 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 19 இடங்களில் பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. டெல்லி சட்டமன்றத்…
சென்னை : 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 2, குரூப் 2ஏ பிரதான ( Main)…
சென்னை : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் மற்றும் டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை நடைபெறவுள்ளது.…
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…