செப்.8,9 தேதிகளில் பாஜக செயற்குழுக் கூட்டம்..!! மெகா கூட்டணியை மேனேஜ் பன்ன வியூகம்..!!
பாஜக செயற்குழுக் கூட்டம் வரும் செப்.மாதம் 8,9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.முன்னதாக நடைபெற வேண்டிய இந்த செயற்குழுக் கூட்டம் இந்திய முன்னாள் பிரதமரும்,அக்கட்சியின் தலைவருமான வாஜ்பாய் அவர்கள் மறைவை ஒட்டி ஒத்தி வைக்கப்பட்டநிலையில் செப்.மாதம் நடக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதனிடையே மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டிஸ்கர் 3 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் வரவுள்ள நிலையில் சட்டமன்ற தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தல் குறித்து இந்த செயற்குழுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
இக்கூட்டத்தில் தேர்தல் வியூகம் மற்றும் பிரச்சாரயுத்திகள் குறித்தும்,எதிர்க்கட்சியினரின் வியூகங்கள், மகா கூட்டணியை முறியடிப்பது போன்ற முக்கிய பிரச்சினைகளையும் இக்கூட்டத்தில் விவாதிக்க கட்சியின் மூத்த தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
DINASUVADU