செப்டம்பர் 10 …!நாடு முழுவதும் முழு அடைப்பு …!பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை ..!அதிரடி அறிவிப்பு

Default Image

புதுச்சேரியில் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க்ப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 10 ஆம் தேதி நாடு முழுவதும் விண்ணை முட்டும் பெட்ரோல்,டீசல் விலைக்கு எதிராக மத்திய பாஜக அரசை கண்டித்து பாரத்பந்த் நடைபெறும் என்று காங்கிரஸ் அறிவித்தது.

Image result for bharat bandh

 

இந்த போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பும் விடுத்தார்.

Image result for பெட்ரோல்

அதேபோல் மதிமுக,இந்திய கம்யூனிஸ்ட்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி உட்பட பல்வேறு கட்சிகள் ஆதரவு அளித்துள்ளனர்.

இந்நிலையில் நாளை நாடு முழுவது பெட்ரோல்,டீசல் விலைக்கு எதிராக மத்திய பாஜக அரசை கண்டித்து பாரத்பந்த் நடைபெறும் என்று காங்கிரஸ் அறிவித்திருந்த நிலையில் புதுச்சேரியில் இன்று அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி(காங்கிரஸ் )தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த ஆலோசனைக்கு பின்னர்  முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில்,நாளை  முழு அடைப்பு போராட்டம் காரணமாக புதுச்சேரியில் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்