இந்திய அழகியாக தமிழகத்தைச் சேர்ந்த 19 வயதான அனு கீர்த்தி வாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்திய அழகிக்கான இறுதிச் சுற்று மும்பையில் நேற்றிரவு நடைபெற்றது. அதில் போட்டியிட்ட 30 பேரில் இருந்து அழகியை கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உள்ளிட்டோர் அடங்கிய குழு தேர்வு செய்தது. அதில் சென்னையைச் சேர்ந்த 19 வயதான அனுகீர்த்தி வாஸ் இந்திய அழகியாக தேர்வானார். அவர் சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ. பிரெஞ்ச் படித்து வருகிறார்.
நடிப்பிலும், மாடலிங்கிலும் ஆர்வம் உடைய அனு கீர்த்திவாஸ், இந்த ஆண்டு நடைபெறும் உலக அழகிப்போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்பார். இந்த போட்டியில் அரியானாவைச் சேர்ந்த மீனாட்சி சௌத்ரி, ஆந்திராவைச் சேர்ந்த ஷ்ரேயா ராவ் ஆகியோர் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தைப் பிடித்தனர்.
மேலும் அனு கீர்த்திவாஸ் ஒரு நடன கலைஞரும் மற்றும் தடகள வீரரும் ஆவார். அவருக்கு பைக்கை நெடுந்தூரம் ஓட்டிச் செல்வது மிகவும் பிடித்தமான ஒன்றாகுமாம்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 9 வீரர்கள் பலியாகினர். பிஜப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டு ரோந்து…
டெல்லி : சீனாவில், 14 வயதுக்கு உட்பட சிறார்களை தாக்கும் HMPV வைரஸ் தொற்றுகள் தற்போது கணிசமான அளவில் அதிகரிக்க…
சென்னை ;முடி உதிர்வதை தவிர்க்க வீட்டிலேயே ஹெர்பல் ஷாம்பு தயாரிப்பது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சீயக்காய்- 50…
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில்தமிழக அரசின் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காமல்,…
சென்னை : 2025ஆம் ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இன்று முதல் வரும் சனிக்கிழமை வரையில்…
சென்னை: தமிழகத்தில் பண்டிகை காலங்களிலும் வார இறுதி நாள் விடுமுறைகளை முன்னிட்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். வரும் 14ம்…