செசல்ஸ் நாட்டில் இந்தியா கடற்படை தளம் அமைக்கும் திட்டம் ரத்து..!
செசல்ஸ் நாட்டில் இந்தியா கடற்படை தளம் அமைக்கும் திட்டத்துக்கு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை கைவிடுவதாக அந்நாட்டின் அதிபர் டேனி ஃபயூரே (Danny Faure) அறிவித்துள்ளார்.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடற்கொள்ளையர்களை கட்டுப்படுத்துவதற்காக, பல்வேறு நாடுகள் இணைந்து ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதையடுத்து, இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள செசல்ஸ் நாட்டின் அசம்சன் தீவுப் பகுதியில் ராணுவ தளம் ஒன்றை அமைக்க, இந்தியா சார்பில் கடந்த 2015ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், திட்டத்துக்கு செசல்ஸ் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைக்கவில்லை. இந்நிலையில், இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் கைவிடப்படுவதாக கூறியுள்ள செசல்ஸ் அதிபர் டேனி ஃபயூரே, சொந்த செலவிலேயே கடற்படை தளத்தை அசம்சன் தீவில் அமைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.