சூறாவளி பிரச்சாரத்தில் பாஜக….மேடையில் இருந்து சருக்கி விழுந்த பிஜேபி தலைவர்…….தலைவரே..ரே….பாய்ந்த தொண்டர் படை…!!!வீடியோ இதோ..!!!..
மத்தியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தனது வாகனத்தில் இருந்து கீழே இறங்கும்போது திடீரென கீழே தடுமாறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த பரபரப்பான நிகழ்வு மத்தியப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.மத்திய மாநிலத்தில் வருகின்ற 28-ம் தேதி அம்மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் அங்கு களைகட்டியுள்ளது. இந்நிலையில் பிரச்சார களத்தில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் தான் நேற்று மத்தியப்பிரதேச மாநில சிவபுரி மாவட்டத்தில் உள்ள அசோக்நகரில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டார். அந்நகரில் உள்ள துளசி பார்க் பகுதியில் வாகனத்தில் நின்றபடியேஅமித் ஷா பிரச்சாரம் செய்தார்.பிரச்சாரத்தில் பேசிய அமித்ஷா மத்தியப்பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுவிடலாம் என்று ராகுலும் கட்சியும் கனவு காண்கிறது.
ஆனால் மாநிலத்தில் 2003- ஆண்டில் இருந்து ஆட்சியில் பாஜக இருக்கிறது.மேலும் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் 2005ம் ஆண்டு முதல் மாநிலத்திற்கு நல்லாட்சி கொடுத்து வருகிறார்.நாட்டில் அதிகமான மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி துடைத்து எறியப்பட்டு விட்டது.இந்திய மக்கள் காங்கிரஸ் கட்சியை ஏற்கத் தயாராக இல்லை. மத்தியப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. மத்திய பிரதேசத்தில் திக்விஜய் சிங் , கமல்நாத் மற்றும் ஜோதிர்தயா சிந்தியா இதில் யாரை தேர்ந்தெடுத்து ஏற்கப்போகிறார் ராகுல் என்று பேசினார்.
இந்த பிரச்சாரத்திற்கு பின் வாகனத்தில் இருந்து கீழே இறங்க அமித் ஷா முயன்று போது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார்.அவர் கீழே விழுவதை பார்த்த அருகில் நின்றிருந்த தொண்டர்கள் அவர்களின் தலைவரை தாங்கிப்படித்து தூக்கினார்கள். இதில் பெரிதாக காயம் ஏற்படவில்லை. அதன்பின், பாஜக நிர்வாகிகளுடன் கலந்தாய்வு செய்தார். பின்நர் மீண்டும் தனது பிரச்சாரத்தை மீண்டும் அமித் ஷா தொடர்ந்தார்.
Fall of #Bjp #President @AmitShah while #BJPWinningMP #BJPWinningMP2018 #Election time many more new things to #WATCH #news #Molitics pic.twitter.com/bCvPT92aAO
— Vardhan (@VardhanSharma_) November 24, 2018
DINASUVADU