குஜராத் முதல்வர் விஜய் ரூபானி 5000 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் சக்தி பூங்கா அமைவதற்கான ஒப்புதலை அளித்துள்ளார். இப்பூங்காவின் கட்டுமானப் பணிகள் முழுமையடையும்போது உலகில் மிகப்பெரிய சூரிய மின்சக்தி பூங்காவாக இது திகழும்.
தோலெரா சிறப்பு முதலீட்டு மண்டலத்தில் அமைக்கப்பட உள்ள இந்த பூங்கா ரூ .25,000 கோடி முதலீட்டில் பணிகள் தொடங்கப்பட உள்ளன. உலகின் பிரமாண்ட சூரிய மின் உற்பத்தி பூங்கா 11,000 ஹெக்டேர் நிலத்தில் அமைக்கப்பட உள்ளது.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி, சூரிய மின் சக்தி உற்பத்தியில் மிகப்பெரிய சாதனைக்கான இலக்கை நிர்ணயித்துள்ளார். அவ்வகையில், அவரது இலக்கின்படி 2022 ஆம் ஆண்டளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் மூலமாக 175 ஜிகாவாட் மின்சாரம் தயாரிக்க இந்த திட்டம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கும் என முதல்வர் தெரிவித்துள்ளார்..
இந்த திட்டத்தின்படி நிர்மாணிக்கப்பட உள்ள சூரிய மின் சக்தி பூங்காவில் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுவது மட்டுமல்ல, தோலெரா சர்வதேச நகரத்தைச் சுற்றிலும் புதிய உற்பத்திக்கான தொழிற்சாலைகளும் அமையும். இவ்வாறு குஜராத் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…